இந்தியா

எரிபொருள் தட்டுப்பாடு - அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் நாளை பிரதமர் ஆலோசனை

எரிபொருள் தட்டுப்பாடு சூழல் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார்

மாலை மலர்

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆலோசிக்க, பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.

ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையேயான போர் சூழலால் இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தித் தேவைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு, கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் குறித்து மாநில அரசுகளின் தயார்நிலையை பிரதமர் கேட்டறிய உள்ளார்.

 'டீம் இந்தியா' என்ற அடிப்படையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்வதே இக்கூட்டத்தின் முக்கிய இலக்காகும். தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் முதலமைச்சர் இதில் பங்கேற்கமாட்டார்கள்.

முன்னதாக, இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டமும், பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்ட ஆலோசனையும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.