இந்தியா

ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்.. பெட்ரோல், டீசலை சிக்கமானாக பயன்படுத்துங்கள் - பிரதமர் மோடி

இந்தியாவில் எண்ணெய் கிணறுகள் இல்லை என்பதால், பெட்ரோல், டீசலைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம்.

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள, நாடு தழுவிய அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு பயன்பாட்டைக் குறைக்குமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் எண்ணெய் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

இந்தியாவில் எண்ணெய் கிணறுகள் இல்லை என்பதால், பெட்ரோல், டீசலைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம்.

போக்குவரத்தைக் குறைக்க தனியார் நிறுவனங்கள் மீண்டும் Work from Home முறையைச் செயல்படுத்த வேண்டும்.

மெட்ரோ ரயில் வசதி உள்ள நகரங்களில் பொதுமக்கள் அதனைப் பயன்படுத்த வேண்டும்.

சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால், அவற்றை வாங்குவதற்காகச் செலவிடப்படும் அந்நியச் செலாவணியைச் சேமிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை.

நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்க, தங்கம் வாங்குவதை மக்கள் ஓராண்டு குறைக்க வேண்டும்.

முன்பு போர் காலங்களில் மக்கள் தங்கத்தை தானமாக வழங்கினர். இன்று தானம் தேவையில்லை, ஆனால் அடுத்த ஒரு ஆண்டிற்கு அவசியமின்றி தங்கம் வாங்க மாட்டோம் என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

SCROLL FOR NEXT