இந்தியா

ஹோலி, தீபாவளி பண்டிகையின் போது இலவச கியாஸ் சிலிண்டர்- அரசு அறிவிப்பு

குழாய் வழியாக கியாஸ் பெறுபவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைவர்.இந்த திட்டத்துக்காக ரூ.242 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லியில் முதல்-மந்திரி ரேகா குப்தா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

சட்டசபை தேர்தலின் போது ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என பா.ஜ.க. வாக்குறுதி அளித்தது.

இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகையின் போது இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி ரேகா குப்தா நேற்று அறிவித்தார்.

மேலும் அவர், தகுதியான பயனாளிகளுக்கு கியாஸ் சிலிண்டருக்கான தொகை ரூ.853 அவர்களது வங்கி கணக்கில் ஒவ்வொரு முறையும் வரவு வைக்கப்படும் என்றும், குழாய் வழியாக கியாஸ் பெறுபவர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைவர் என்றும் கூறினார்.

இந்த திட்டத்துக்காக ரூ.242 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.