இந்தியா

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 35வது நினைவு நாள்- சோனியா, ராகுல் மரியாதை

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் மே 21ம் தேதியான இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு நாளையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதன்படி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ப.சிதம்பரம், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஸ்ரீபெரும்பத்தூரில் 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.