இந்தியா

மத்தியபிரதேச உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்யா பாஜகவில் இணைந்தார்

கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னர் அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைந்தார்.பாஜகவில் சேர்ந்த அபிஜித் தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.

கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி ஓய்வு பெற்ற மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ரோகித் ஆர்யா இன்று அம்மாநில பாஜகவில் இணைந்துள்ளார்.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோ பாஜகவின் இணைந்த இரண்டு மாதத்தில் மேலும் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி பாஜகவில் இணைந்துள்ளார்.

2018 முதல் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்கள் முன் ராஜினாமா செய்தார்.

கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னர் அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் சேர்ந்த அபிஜித் தம்லுக் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.