கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் பெர்ஹாம்பூர் பாராளுமன்ற தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் வேட்பாளராக களமிறங்குகிறார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
தேர்தல் களம் மிகவும் வித்தியாசமானது. ஆனால் மக்களின் எதிர்பார்ப்புகள் அப்படியே இருக்கின்றன. அவர்களுக்காக நான் பணியாற்றுகிறேன். எனது கட்சி செய்த பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
2007-ம் ஆண்டு உலக கோப்பைக்கு உற்சாகமாக இருந்ததைப் போல தற்போதும் உற்சாகமாக இருக்கிறேன்.
குஜராத் எனது ஜென்ம பூமி மற்றும் மேற்கு வங்காளம் எனது கர்ம பூமி.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார். ஆனால் காலம் மாறுகிறது, மாற்றம் நல்லதுக்காகவே நடக்கும் என தெரிவித்தார்.