இந்தியா

பிஎம் ஸ்ரீ திட்டம்: மத்திய அரசிடம் கேரள அரசு அடிபணிந்துவிட்டது - பினராயி விஜயன் தாக்கு

தேர்தலுக்கு முன் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஐக்கிய ஜனநாயக முன்னணி கடுமையாக எதிர்த்தது.

மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தை மாநிலக் கல்வி உரிமைகளைப் பாதிக்காத வகையில், சில கட்டுப்பாடுகளுடன் தொடர கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 4 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை துணைக்குழுவை முதல் மந்திரி வி.டி.சதீசன் அமைத்துள்ளார்.

இந்நிலையில், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் மத்திய அரசிடம் கேரள அரசு அடிபணிந்து விட்டது என எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், தேர்தலுக்கு முன் பிஎம் ஸ்ரீ திட்டத்தை கடுமையாக எதிர்த்தவர்கள் இப்போது மத்திய அரசின் முன் மண்டியிட்டு விட்டார்கள். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தனது முடிவை இடதுசாரி கூட்டணி அரசு நிறுத்தி வைத்திருந்தது. மாநில அரசால் இந்த ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்க முடியாது என்று ஏதேனும் சட்ட ஆலோசனை பெற்றதா என்பதை ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில், அவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கான காரணங்களையும் தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.