இந்தியா

வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீடிப்பு

விக்ரம் மிஸ்ரி 2019 முதல் 2021வரை 3 ஆண்டுகள் சீனாவில் இந்தியத் தூதராக பணியாற்றினார்.

சீனா மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் நிபுணராகக் கருதப்படும் விக்ரம் மிஸ்ரி (59), புதிய வெளியுறவு செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், விக்ரம் மிஸ்ரிக்கு மேலும் ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2027 ஜூலை 14ம் தேதி அவர் வெளியுறவு செயலாளர் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 1989 பேட்ச் ஐஎப்எஸ் அதிகாரியான விக்ரம் மிஸ்ரி, துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்தார். அதற்குமுன் 2019 முதல் 2021வரை 3 ஆண்டுகள் சீனாவில் இந்தியத் தூதராக பணியாற்றினார். 2020 ஜூனில் கல்வான் பள்ளத்தாக்கு மோதலை தொடர்ந்து இந்தியா–சீனா பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்காற்றினார்.

விக்ரம் மிஸ்ரி, ஸ்பெயின் மற்றும் மியான்மரில் இந்தியத் தூதராக பணியாற்றியுள்ளார். பெல்ஜியம், பாகிஸ்தான், அமெரிக்கா, இலங்கை மற்றும் ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகங்களில் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

1997-ல் ஐ.கே.குஜ்ரால், 2012-ல் மன்மோகன் சிங், 2014-ல் நரேந்திர மோடி என 3 பிரதமர்களுக்கு தனிச் செயலாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.