சிஜேபி மீது சுமத்தப்படும் வெளிநாட்டு தொடர்பு குற்றச்சாட்டுகள் குறித்து அபிஜித் தீப்கே விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி, தங்கள் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் சுமத்தப்படும் வெளிநாட்டு தொடர்பு குற்றச்சாட்டுகள் குறித்து சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே விமர்சித்துள்ளார்.
தன் எக்ஸ் பக்க பதிவில், "அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியை பூஜ்ஜியமாக குறைக்க பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளார்.
500 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களை வாங்க அவர் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க, ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இருப்பினும், சிலரின் கருத்துப்படி, எதிர்க்கட்சிகளும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் தான் வெளிநாட்டு சக்திகளின் கட்டுப்பாட்டில் உள்ளன" என்று அபிஜித் தீப்கே கிண்டலாகக் கூறியுள்ளார்.
டிரம்ப் 2026 பிப்ரவரியில் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்திருந்தார். இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி 18% ஆகக் குறைக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களை வாங்கும் தனது விருப்பத்தையும் இந்தியா தெரிவித்திருந்தது.
இந்தக் கொள்முதல்களில் எரிசக்தி, தொழில்நுட்பப் பொருட்கள், விமானங்கள் மற்றும் அவற்றின் பாகங்கள், அரிய உலோகங்கள் மற்றும் நிலக்கரி ஆகியவை அடங்கும்.
இந்தியா ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, தேவைப்பட்டால் வெனிசுலா உட்பட அமெரிக்காவிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்யும் என்று டிரம்ப் கூறியிருந்தார்.
இருப்பினும், இந்திய-அமெரிக்க கூட்டறிக்கையில் ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது குறித்து வெளிப்படையாக எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை.
வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்ட சலுகைகள், உள்நாட்டு சந்தையில் அதன் தாக்கம் மற்றும் ஒப்பந்தத்தின் வெளிப்படைத்தன்மை ஆகியவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்திய அரசு வெளிநாட்டு சக்திகளின் அழுத்தத்திற்குப் பணிந்துவிட்டதா என்று அவர்கள் விமர்சித்து வரும் சூழலில் தீப்கேவின் விமர்சனம் வந்துள்ளது.