இந்தியா

கலப்படம் செய்யப்பட்ட 200 கிலோ ஸ்வீட்கள் பறிமுதல் - உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி

மதுரா மாவட்டத்தில் உள்ள இனிப்புக் கடைகளில் சுகாதாரமற்ற உணவுகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பாங்கே பிஹாரி கோவிலின் அருகே இனிப்புக் கடைகள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் புனித மாதமான புருஷோத்தம் மாதத்தில், அக்கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்யும் நோக்கில் அதிகாரிகள் ஆய்வை மேற்கொண்டனர்.

ஆய்வின் ஒரு பகுதியாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஜிதேந்திர சிங் கோவிலுக்கு அருகே வித்யாபீத் சந்திப்பில் அமைந்துள்ள இனிப்புக் கடை ஒன்றில் திடீர் சோதனையை மேற்கொண்டார்.

அப்போது இனிப்புக் கடையில் சுகாதாரமற்ற நிலையில் பிளாஸ்டிக் சாக்கில் இருந்த 200 கிலோகிராம் பீடாக்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து கலப்படம் செய்யப்பட்ட சுமார் 200 கிலோ இனிப்புகளை சம்பவ இடத்திலேயே உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அழித்தனர்.