அறையில் 5 பேரும் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் பட்டலப்பள்ளியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 36). இவரது தாய் கோகிலா லட்சுமி (50). சகோதரிகள் மல்லேஸ்வரி (45), ஸ்ரீதேவி (33), மல்லேஸ்வரியின் மகன் மணிகண்டா (15).
சுதாகருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரது சகோதரிகளுக்கு திருமணமாகி இருவரும் கணவர்களை விட்டு பிரிந்து சுதாகர் வீட்டில் வசித்து வந்தனர்.
சுதாகர் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த 28-ந்தேதி குடும்பத்தினர் அனைவரும் ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலுக்கு சொந்தமான விடுதியில் அறை எடுத்து தங்கினர்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுதாகர், மணிகண்டா இருவரும் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சுதாகரின் தாய் கோகுலா ஆதி லட்சுமி, அவரது சகோதரிகள் மல்லேஸ்வரி, ஸ்ரீதேவி ஆகியோர் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நேற்று சுதாகர் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இது குறித்து விடுதி மேலாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அறையில் 5 பேரும் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.