இந்தியா

ராஜ்தானி விரைவு ரெயிலில் தீ விபத்து: பயணிகள் வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

ரெயிலின் ஒரு பயணிகள் பெட்டி முழுமையாக எரிந்து சேதமடைந்து உள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற ராஜ்தானி விரைவு ரெயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகே ரெயில் சென்றபோது ஒரு பெட்டியில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டு 68 பயணிகள் வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

ரெயிலின் கடைசி பெட்டியில் இருக்கும் கார்டு, தீப்பற்றியதை கவனித்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தீ விபத்தில் ராஜ்தானி விரைவு ரெயிலின் ஒரு பயணிகள் பெட்டி முழுமையாக எரிந்து சேதமடைந்து உள்ளது.