யஷ் மகேஷ்வரி
இந்தியா

பீகார் பெண்கள் குறித்து இழிவான கருத்து: ஸ்டாண்ட்-அப் காமெடியன் யஷ் மகேஷ்வரி மீது வழக்குப்பதிவு

சத் பூஜை மற்றும் பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது குறித்து சர்ச்சை பதிவு.

பீகார் மாநில பெண்கள் மற்றும் சத் பூஜை பாரம்பரியம் குறித்து ஆபாசமாகவும் அவதூறாகவும் கருத்து தெரிவித்ததாக பிரபல ஸ்டாண்ட்-அப் காமெடியன் யஷ் மகேஷ்வரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

யஷ் மகேஷ்வரி என்பது பிரபல யூடியூபர். ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியகளை வழங்கி வருகிறார். இதனால் இவரை பலர் சமூக வலைத்தளங்களில் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

சத் பூஜை, நெற்றியில் குங்குமம் வைப்பது குறித்து சர்ச்சை கருத்து

தனது YouTube சேனலில் வெளியிட்ட நகைச்சுவை நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், சத் பூஜையின்போது பீகார் பெண்கள் நெற்றியில் நீளமாக வைக்கும் சிந்தூரம் குறித்து அவர் தெரிவித்த ஆபாசமான கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

கடும் எதிர்ப்பு

இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, பாஜக தலைவரும் சமூக ஆர்வலருமான ரிது ஜெய்ஸ்வால், நடிகர் மீது பீகாரின் அனைத்து மாவட்டங்களிலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்து, நவம்பர் 24-ம் தேதி பாட்னா சைபர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 75(1), 79, 351, 352 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66(C), 66(D) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யஷ் மகேஷ்வரி மன்னிப்பு

இதற்கிடையே, தனது கருத்துக்கு எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து யஷ் மகேஷ்வரி மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார். பீகாரின் கலாசார மரபுகள் குறித்து அவ்வாறு பேசியிருக்கக் கூடாது என்றும், யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்துவது தனது நோக்கமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

தனது தவறை ஒப்புக்கொண்ட அவர், இனிமேல் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்காமல் கவனமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT