இந்தியா

செபி அமைப்பின் தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துஹின் காந்தா பாண்டே செபி அமைப்பு தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் மத்திய அரசின் நிதித்துறை செயலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலை மலர்

புதுடெல்லி:

மத்திய அமைச்சரவை செயலராக இருந்த ராஜிவ் கவுபா பணி நிறைவு பெற்றார். அப்பதவிக்கு நிதித்துறை செயலராக இருந்த டி.வி. சோமநாதன் மத்திய அமைச்சரவை செயலராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து காலியாக இருந்த நிதித்துறை செயலர் பதவிக்கு துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்திய பங்கு பரிவர்த்தனை அமைப்பின் (செபி) தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இப்பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார். இதற்கான உத்தரவை மத்திய அரசு நியமனக்குழு பிறப்பித்தது.

கடந்த 1987-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். கேரடரான துஹின் காந்தா பாண்டே முதலீடு மற்றும் பொதுத்துறை செயலராக இருந்து வந்தார்.