ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் தொண்டாபி பி.சி. காலனியை சேர்ந்தவர் லட்சுமையா. விவசாயி. இவரது மனைவி பூலட்சுமி. தையல் வேலை செய்து வந்தார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 5 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் பூ லட்சுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று காலை விவசாய நிலத்திற்கு சென்ற லட்சுமையா பணி முடிந்து மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பூ லட்சுமி கணவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதில் ஆத்திரமடைந்த லட்சுமையா வீட்டிலிருந்த கோடாரியை எடுத்து வந்து மனைவியை தாக்கினார்.
பூலட்மியின் வலது காலை கோடாரியால் வெட்டி துண்டித்தார். துண்டிக்கப்பட்ட காலை ஒரு பையில் போட்டுக் கொண்டு போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். இதனை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் பூலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக சட்டென பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.