இந்தியா

போலி ஜிஎஸ்டி அதிகாரிகள் போன்று ரூ.2.5 கோடி நகை கொள்ளை: ஹவாலா நகைக்கடைகளை குறிவைக்கும் கொள்ளையர்கள்

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவின் பார்க் தெருவில் பிரபல நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

மேற்கு வங்கத்தில் நகைக்கடை ஒன்றிற்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் போன்று வேடமிட்டு சென்ற கொள்ளையர்கள், நகைக்கடை உரிமையாளரை ஏமாற்றி சுமார் ரூபாய் 2.5 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவின் பார்க் தெருவில் பிரபல நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த நகைக்கடையில் தங்க கட்டிகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததுடன், முறைகேடாக ஹவாலா பணம் கையாளப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திங்கட்கிழமை அதிகாலை 1:30 மணியளவில் ஜிஎஸ்டி அதிகாரிகள் போன்று வேடமிட்டு கொள்ளை கும்பல் ஒன்று நகைக்கடைக்கு வந்துள்ளது.

இதையடுத்து நகைக்கடையில் மக்கள் நடமாட்டம் இல்லாததை நோட்டம் விட்ட கொள்ளை கும்பல் போலி அதிகாரிகள் போன்று தங்களை அடையாள படுத்தியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து கொள்ளையர்கள் நகைக்கடை உரிமையாளரிடம் போலி அடையாள அட்டைகளை காண்பித்து, அமலாக்க அதிகாரிகளை போன்று நாடகமாடியுள்ளனர்.

நகைக்கடை உரிமையாளர் சட்டவிரோதமாக ஹவாலா பணத்தை கையாண்டு வந்ததால், அவருக்கு போலி அதிகாரிகள் மீது சந்தேம் வராமல், அதிகமான அளவில் பயம் வந்துள்ளது.

இதனை பயன்படுத்திய கொள்ளையர்கள், சட்ட விரோதமாக வைத்துள்ளதாக கூறி, சுமார் 1.9 கிலோ எடையுள்ள 128 தங்க வளையல்களை எடுத்து சென்றனர்.

இந்த நிலையில் கொள்ளையர்களை கண்டுபிடிக்கவும், கொள்ளை போன சுமார் ரூபாய் 2.5 கோடி மதிப்புள்ள நகைகளை மீட்டு தரவும் நகைக்கடை உரிமையாளர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள இரண்டு சந்தேக நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT