இந்தியா

Exit Poll முடிவுகள்: 5 மாநிலங்களில் 3 மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி

முதல் முறையாக மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்ற உள்ளது என தகவல்.

தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது.

இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பா.ஜ.க. அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரியில் ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது.

அசாமில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது.

முதல் முறையாக மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்ற உள்ளது என வெளியான தகவல் அக்கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.