மத்திய கிழக்கில் போர் நடந்து வருவதால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் சுமார் 60 நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பும், 74 நாட்களுக்கான கச்சா எண்ணெய் கையிருப்பும் உள்ளது என்றும், பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி.க்கு எங்கும், எந்தப் பற்றாக்குறையும் இல்லை என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை லிட்டருக்கு தலா 10 ரூபாய் குறைத்துள்ளது. பெட்ரோலுக்கான கலால் வரி ரூ.13-ல் இருந்து ரூ.3 ஆக குறைத்தது. டீசலுக்கான கலால் வரி ரூ.10-ல் இருந்து பூஜ்ஜியமாக குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வளைகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததே கலால் வரி குறைப்புக்கு காரணமாகும்.
எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. கலால் வரியை மத்திய அரசு குறைத்தாலும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.