இந்தியா

Raj Chakraborty | தேர்தல் தோல்வி எதிரொலி... தீவிர அரசியலில் இருந்து விலகிய திரைப்பட இயக்குநர்

திரைப்படங்கள் மூலம் மக்களை மகிழ்விக்க நான் எப்போதும் முயன்றிருக்கிறேன்.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பராக்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக களம் கண்ட ராஜ் சக்ரவர்த்தி, பா.ஜ.க.வின் கௌஸ்தவ் பக்சியிடம் தோல்வியடைந்தார். தேர்தல் தோல்வியை தொடர்ந்து, தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக ராஜ் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தார்.

2021-இல் பராக்பூர் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த சக்ரவர்த்தி, இம்முறை பாக்சியிடம் 15,822 வாக்குகள் வித்தியாசத்தில் அத்தொகுதியை இழந்தார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், தனது அரசியல் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாக சக்ரவர்த்தி தெரிவித்தார்.

என் வாழ்வில் எனக்கு எந்தப் பொறுப்பு வழங்கப்பட்டாலும், அதை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்ற முயன்றிருக்கிறேன். ஒரு இயக்குநராக, என் திரைப்படங்கள் மூலம் மக்களை மகிழ்விக்க நான் எப்போதும் முயன்றிருக்கிறேன்.

“2021-ல் நான் அரசியலில் நுழைந்து, சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக, அதே தகுதியில் எனது பொறுப்புகளை நிறைவேற்ற முயன்றேன். அந்த காலக்கட்டம் 2026-இல் முடிவடைகிறது, அதனுடன் எனது அரசியல் பயணமும் முடிவுக்கு வருகிறது,” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.