இந்தியா

கரப்பான்பூச்சி கட்சியினர் கூட செய்தியாளர்களை சந்தித்துவிட்டனர்... ஆனால்? - நெட்டிசன்களின் கேள்வி

இக்கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டு நேற்று முதல் செய்தியாளர் சந்திப்பு நடந்தது எதிர்பாராத திருப்பத்தை கொடுத்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்தின் சர்ச்சை பேச்சால் இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தானிலும் உதித்த ஒரு நய்யாண்டி அரசியல் இயக்கம்தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.

இளைஞர்கள் எழுச்சியுண்டால் இந்தியாவின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் நிலை என்னவாகும் என்பதற்கு இதுவே உதாரணம் எனவும், இக்கரப்பான்பூச்சி கட்சி உதயத்திற்கு பலரும் கருத்து தெரிவித்தனர்.

பல்வேறு காரணங்களால் இதன் இணையதளம் முடக்கப்பட்டு, மீண்டும் உருவாகி உள்ளது. இந்நிலையில் இந்த கரப்பான்பூச்சி கட்சி தரப்பில் முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

10 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டாலும், இது வெறும் விளையாட்டிற்காக தொடங்கப்பட்ட ஒரு இணையப் பக்கம் என்றே பலரும் நினைத்து வந்தநிலையில், பீகாரில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் இக்கட்சி போட்டியிட பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தற்போது செய்தியாளர் சந்திப்பும் நிகழ்ந்துள்ளது. மேலும் இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மத்திய அரசின் பல்வேறு குளறுபடிகளை கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி கோரி, ஜூன்.6-ல் சிஜேபி சார்பில் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டு நேற்று முதல் செய்தியாளர் சந்திப்பு நடந்தது எதிர்பாராத திருப்பத்தை கொடுத்துள்ளது. இதனால் உண்மையில் இந்த இணைய இயக்கம் உண்மையில் அரசியலில் குதிக்குமா? என பலரும் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

அதேசமயம், பல்வேறு இணையவாசிகளும் இந்த செய்தியாளர் சந்திப்போடு பிரதமர் மோடியையும், தமிழ்நாடு முதலமைச்சர் விஜயையும் தொடர்புபடுத்தி பேசிவருகின்றனர். உண்மையான அரசியல் இயக்கமாக இன்னும் உருவெடுக்காத கரப்பான்பூச்சி கட்சியினரே செய்தியாளர்களை சந்தித்துவிட்டனர்.

ஆனால் பிரதமர் மோடியும், விஜய்யும் இதுவரை சந்திக்கவில்லை எனவும், சந்திக்காதது ஏன்? எனவும் இணையத்தில் கருத்துகளை பதிவிட்டும், கேள்விகளை எழுப்பியும் வருகின்றனர்.