சர்வதேச எரிசக்தி விலை உயர்வின் காரணமாக இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களை குறைக்கும் நோக்கில், இந்தியா தனது எத்தனால் பயன்பாட்டை அதிகரித்துள்ளது.
இந்த எத்தனால் பயன்பாட்டை ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் வாகனங்களில் பயன்படுத்தும் விதமாக, இந்தியாவின் முதல் ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் வாகனத்தை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இது எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் அதிக எத்தனாலைப் பயன்படுத்தவும், குறைவான இறக்குமதி எரிபொருளை நிரப்பவும் ஊக்குவிக்குவிக்கிறது.
இதுகுறித்து பேசிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “ டெல்லி, புனே, மும்பை மற்றும் நாக்பூர் ஆகிய பகுதிகளில் 50 முதல் 100 எத்தனால் எரிபொருள் நிலையங்களுடன் இந்த திட்டம் தொடங்கும்.
2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் இதை 500 நிலையங்களாகவும், 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் மேலும் 5,000 நிலையங்களாகவும் அதிகரிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து புதிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பாதி ஃப்ளெக்ஸ் ஃப்யூல் தரத்திற்கு இணக்கமானவையாக இருந்தால், அது கூடுதலாக 311.8 கோடி லிட்டர் எத்தனால் தேவையை உருவாக்கி, விவசாயிகளுக்கு ரூ.12,403 கோடி கூடுதல் வருமானத்தை ஈட்டித் தரும்.
சர்வதேச எரிசக்தி விலை உயர்வின் காரணமாக கொள்முதல் செலவுகள் அதிகரித்த போதிலும், சில்லறை எரிபொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதால் ஒரு நாளைக்கு ரூ.500 முதல் 550 கோடி இழப்பு ஏற்படுகிறது” என்று அவர் கூறினார்.