Kangana Ranaut slams Hrithik Roshan: warns him not to fuel ongoing social media fire 
இந்தியா

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம்: ஹிருத்திக் ரோஷனுக்கு பதிலடி கொடுத்த கங்கனா ரனாவத்

இதுபோன்ற கருத்துக்கள் மூலம் என்னை சீண்ட வேண்டாம் என கங்கனா பதிவிட்டார்.

சமூக வலைத்தளத்தில் பழைய விவகாரங்களை குறித்து பதிவிடுவதற்கு கண்டனம் தெரிவிக்காததற்காக ஹிருத்திக் ரோஷன் மீது கங்கனா ரனாவத் சாடியுள்ளார்.

சாரி ஹிருத்திக் ரோஷன் என்ற ஹேஷ்டேக்

சாரி ஹிருத்திக் ரோஷன் என்ற டிரெண்டிங் ஹேஷ்டேக்கில் தனக்கு எதிராக மோசமான கருத்துகளுக்கு கண்டனம் தெரிவிக்காமல், ஆமோதிக்கும் வகையில் கருத்து பதிவிடுவது சரியான அல்ல என ஹிருத்திக் ரோஷனுக்கு கங்கனா ரனாவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சராக இருந்து தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டம் காரணமாக தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினமா செய்தார். இதனால் சிஜேபி தனது போராட்டத்தை முடித்துக் கொண்டது.

இந்த போராட்டம் தொடர்பாக சிஜேபிக்கு எதிராக பாஜக எம்.பி. கங்கனா ரனாவத், மாணவர்களுக்கு எதிராக கடுமையான வகையில் வார்த்தையை பயன்படுத்தினார். இதனால் அவருக்கும் சிஜேபி கட்சி செய்தி தொடர்பாளருமான சௌரவ் தாஸ் வார்த்தைப்போர் நடைபெற்றது.

அப்போது, காக்ரோச் ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் செளரவ் தாஸ் கூறுகையில், “என் நண்பர்கள் என்னிடம், நீங்கள் இளம் ஹிருத்திக் ரோஷன் போல இருக்கிறீர்கள்.

ஒருவேளை அதனால்தான் கங்கனா உங்களைத் தாக்குகிறார், என்று சொன்னார்கள்” என்று ஜோக்கிற்காக கூறியிருந்தார்.

இதையடுத்து சமூக வலைதளத்தில் ‘சாரி ஹிருத்திக்’ என்ற ஹேஷ்டேக் வைரலானது. அப்போது பலர் கங்கனா ரனாவத்- ஹரிதிக் ரோஷன் இடையில் 2016-ல் நடைபெற்ற மோதலை குறித்து கருத்து தெரிவித்து வந்தனர்.

ஹிருத்திக் ரோஷன் வேண்டுகோள்

இதனால் மக்கள் சமூக ஊடகக் கருத்துக்களைப் பின்பற்ற வேண்டாம் என்று நடிகர் ஹிருத்திக் ரோஷன் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே பிரெட்டி பேர்டி (Freddy Birdy) என்பவர் உலகம் ஹிரிதிக் ரோஷனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு ஹிரிதிக் ரோஷன் “என் நண்பரே, உங்களுக்கு 'B'-ஐ இனி பிடிக்கவில்லை என்பதற்காக 'A'-க்கு ஆதரவளிப்பது என்பது, நமது சமூகத்தைப் பீடித்துள்ள ஒரு பெரிய அமைப்பு ரீதியான பிரச்சினையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே.

அதற்கான சூழல் சரியானதாகவும், உண்மைகளின் அடிப்படையில் அமைந்ததாகவும் இருக்கும் தருணத்திற்காக நான் காத்திருப்பேன். அது நியாயமாக இருக்கும். ஆனால், இப்போது யார்தான் இதைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்?” என்று பதிவிட்டார்.

தனது பழைய கதை குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கப்படுவதற்கு, எதிர்ப்பு தெரிவிக்காமல் அதற்கு கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் ஹரிதிக் ரோஷன் கருத்து பதிவிட்டுள்ளதாக கங்கனா ரனாவாத் சாடியுள்ளார்.

கங்கனா ரனாவத் பதிலடி

நடிகர் ஹிருத்திக் ரோஷனின் இந்த பதிவிற்கு கங்கனா வெளியிட்ட பதிவில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை நிறுத்திவிட்டு, உங்கள் துணையை சங்கடப்படுத்துவதை நிறுத்துங்கள் என்று கூறினார்.

இதுகுறித்து கங்கனா தனது பதிவில், “அன்புள்ள ஹிருத்திக், உங்கள் சரியான துணையான சபா ஆசாத்தை நீங்கள் கண்டறிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்களும் அவரும் ஜோடியாக அழகாக இருக்கிறீர்கள்.

மேலும், இதுபோன்ற கருத்துக்கள் மூலம் என்னை சீண்ட வேண்டாம். ஹிருத்திக் ரோஷனின் கருத்துக்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருக்கிறது.

நீங்கள் ஒரு உறுதியான உறவில் இருக்கிறீர்கள், இப்படி ஒரு பெண்ணைக் கிண்டல் செய்வது உங்களுக்குப் பொருந்தாது. மாறாக, உங்கள் பெயரைப் பயன்படுத்தி என்னைத் துன்புறுத்தி, கொடுமைப்படுத்தும் அனைவரையும் நீங்கள் கண்டிக்க வேண்டும்.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதையும், உங்கள் துணையை அவமானப்படுத்துவதையும் நிறுத்துங்கள். நல்லறிவு மேலோங்கி, நீங்கள் நியாயமற்ற கருத்துக்களை கூறுவதை நிறுத்துவீர்கள் என்று நம்புகிறேன்” என்று கங்கனா பதிவிட்டார்.

முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு நடிகை கங்கனா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தனது முட்டாள் முன்னாள் காதலன் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் இருவருக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. அதன்பின் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.