கோப்புப்படம் 
இந்தியா

ஜம்மு-காஷ்மீர் துப்பாக்கிச்சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் நடைபெற்று வரும் துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் முமான்ஹால் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வீரர்கள் விரைந்து, அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி தாக்குதல் நடத்தினர். வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டார். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.