திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்திற்கு கடந்த 13-ந் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலின் போது பல்வேறு இடங்களில் கலவரம் நடந்தது. கலவரத்தை அடக்க 25 கம்பெனி துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தியபடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாச்சர்லா சட்டமன்றத் தொகுதியில் ஒஸ்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தற்போதைய எம்எல்ஏ பில்லினேனி ராமகிருஷ்ண ரெட்டி போட்டியிடுகிறார்.
தேர்தல் நாள் அன்று நடந்த கலவரத்திற்கு பில்லினேனி ராமகிருஷ்ண ரெட்டியும், அவரது சகோதரர் வெங்கட்ராம ரெட்டியும் தான் காரணம் என தெலுங்கு தேசம் கட்சியினர் குற்றம்சாட்டினர். வீட்டு காவலில் வைக்கப்பட்டு இருந்த சகோதரர்கள் இருவரும் தலைமரைவாகி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.