இந்தியா

Election Results : மேற்கு வங்கம், அசாமில் பாஜக, கேரளாவில் காங்கிரஸ்.. தேர்தல் முடிவுகள்!

மேற்கு வங்கத்தில் 293 தொகுதிகளில், கேரளாவில் 140 தொகுதிகளில், அசாமில் 126 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம். கேரளாவில் பெரும்பான்மைக்கு 71 இடங்கள் தேவை. அசாமில் பெரும்பான்மைக்கு 64 இடங்கள் தேவை. மேற்கு வங்காளத்தில் பெரும்பான்மைக்கு 148 இடங்கள் தேவை

மாலை மலர்

மேற்கு வங்கத்தில் 293 தொகுதிகளில், கேரளாவில் 140 தொகுதிகளில், அசாமில் 126 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்.

அசாமில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பாஜக 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 28 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், பாஜக 33 இடங்களுடன் முன்னிலையில் உள்ளது.

கேரளாவில் இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலா 3 இடங்களில் சமநிலையில் உள்ளன.

கேரளாவில் இடதுசாரிகள் கூட்டணி - 5 இடங்களில் முன்னிலை, காங்கிரஸ் கூட்டணி - 15 இடங்களில் முன்னிலை, பாஜக கூட்டணி - 3 இடங்களில் முன்னிலை, மற்றவை - 2 இடங்களில் முன்னிலை

மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பவானிப்பூரில் பின்தங்கியுள்ளார். போட்டியாளரான பாஜகவின் சுவேந்து அதிகாரி முன்னிலை வகித்து வருகிறார். நந்திகிராமிலும் சுவேந்து முன்னிலையில் உள்ளார்.

அசாமில் பாஜக 50 இடங்களில் முன்னிலை, காங்கிரஸ் 14 இடங்களில் முன்னிலை.

அசாமின் ஜலுக்பாரியில் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா முன்னிலை

மேற்கு வங்கத்தில் பாஜக 155 இடங்களில், திரிணாமுல் காங்கிரஸ் 120 இடங்களில், காங்கிரஸ் 5 இடங்களில், மற்ற இடங்களில் 2 இடங்களில் முன்னிலை

கேரளாவில் இடது முன்னணி 30 இடங்களில், காங்கிரஸ் கூட்டணி 56 இடங்களில், பாஜக 4 இடங்களில் முன்னிலை

அசாம் சட்டமன்றத்தில் மொத்தம் 126 இடங்கள் உள்ளன; ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை 64 ஆகும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 80-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மேற்கு வங்கத்தில் பாஜக 189 இடங்களில் முன்னிலை, திரிணாமுல் காங்கிரஸ் 108 இடங்களில் முன்னிலை.

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 85 இடங்களில் முன்னிலை, ஆளும் இடது முன்னணி 42 இடங்களில் முன்னிலை, பாஜக ஒரு இடத்தில் முன்னிலை

அசாமில் 97 இடங்களில் பாஜக முன்னிலை, காங்கிரஸ் 26 இடங்களில் முன்னிலை

புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களில் முன்னிலை.

பபானிபூர் தொகுதியில் சுவேந்து அதிகாரியை முந்தி மம்தா பானர்ஜி மீண்டும் முன்னிலை. மம்தா 9,359 வாக்குகளையும், சுவேந்து 8,461 வாக்குகளையும் பெற்ற நிலையில், மம்தா 898 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

கேரளாவில் காங்கிரசின் யுடிஎப் 93 இடங்களில் முன்னிலை, ஆளும் இடது முன்னணி 40 இடங்களில் முன்னிலை.

அசாமில் பாஜக கூட்டணி 98, காங்கிரஸ் 26 இடங்களில் முன்னிலை

மேற்கு வங்கத்தில் பாஜக 189 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 99 இடங்களிலும் முன்னிலை.

மேற்கு வங்கத்தில் பாஜக 192 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 96 இடங்களிலும் முன்னிலை, இடதுசாரிகள் 3 இடங்களிலும் முன்னிலை.

கேரளாவில் காங்கிரசின் யுடிஎப் கூட்டணி 88 இடங்களிலும், இடது முன்னணி 37 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் பிற கட்சிகள் 12 இடங்களிலும் முன்னிலை

அசாமில் பாஜக 97 இடங்கள், காங்கிரஸ் 27 இடங்கள், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 2 இடங்களில் முன்னிலை

வெற்றி நிலவரம்: புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் 7 இடங்களிலும், கூட்டணியில் உள்ள பாஜக 1 இடத்திலும் வெற்றி. அதிமுக 1 இடத்திலும், திமுக 1 இடத்திலும், சுயேச்சை வேட்பாளர்கள் 1 இடங்இடத்திலும் வெற்றி

வெற்றி நிலவரம்: கேரளாவில் காங்கிரஸ் 4 இடங்களிலும், மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடத்திலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்திலும் வெற்றி

மதியம் 3 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் பாஜக 194 இடங்களில் முன்னிலை, திரிணாமுல் காங்கிரஸ் 94 இடங்களில் முன்னிலை, காங்கிரஸ் 1 இடத்தில், இடதுசாரிகள் 1 இடத்தில் பிறர் 1 இடத்தில் முன்னிலை.

மதியம் 3 மணி நிலவரப்படி கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 61 இடங்களில் முன்னிலை, 39 இடங்களில் வெற்றி. இடது முன்னணி காங்கிரஸ் 20 இடங்களில் முன்னிலை, 14 இடங்களில் வெற்றி.

புதுச்சேரியில் 3 மணி நிலவரப்படி, என்ஆர் காங்கிரஸ் 6 இடங்களில் முன்னிலை, 12 இடங்களில் வெற்றி, காங்கிரஸ்-திமுக கூட்டணி 4 இடங்களில் முன்னிலை, 5 இடங்களில் வெற்றி. தட்டான்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் தொகுதிகளின் நிலவரத்தை பாஜகவும் தேர்தல் ஆணையமும் காட்டவில்லை. வழங்கப்படும் புள்ளிவிவரங்கள் போலியானவை. 14 முதல் 18 சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு இந்த நிலைமை மாறும் - மம்தா

மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி 189 இடங்களில்முன்னிலை, 10 இடங்களில் வெற்றி , திரிணாமுல் காங்கிரஸ் 86 இடங்களில் முன்னிலை 3 இடங்களில் வெற்றி

அசாமில் பாஜக கூட்டணி 71 இடங்களில் வெற்றி 29 இடங்களில் முன்னிலை, காங்கிரஸ் 3 இடங்களில் வெற்றி, 19 இடங்களில் முன்னிலை.

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி 69 இடங்களில் வெற்றி, 29 இடங்களில் முன்னிலை, இடது முன்னணி 26 இடங்களில் வெற்றி 9 இடங்களில் முன்னிலை

அசாமின் ஜலுக்பரி தொகுதியில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 112,186 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் பிதிஷா நியோக்கை விட 80,235 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

ஜோர்ஹாட் சட்டமன்றத் தொகுதியில், அசாம் காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய்பாஜகவின் ஹிதேந்திரநாத் கோஸ்வாமியை விட 19,619 வாக்குகள் பின்தங்கியுள்ளார்

மேற்கு வங்கத்தின் பபானிபூர் தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி தற்போது 44,729 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்; இதுவரை 37,545 வாக்குகளைப் பெற்றுள்ள பாஜகவின் சுவேந்து அதிகாரியை விட அவர் 7,184 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

கேரளாவின் தர்மடம் தொகுதியில், பினராயி விஜயன் 84,504 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்; அவரை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வி.பி. அப்துல் ரஷீத் 66,067 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

கேரளாவில் 3 இடங்களில் பாஜக வெற்றி: திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள நெமோன் தொகுதியில் போட்டியிட்ட கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் வெற்றி. கழக்கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சரான வி. முரளீதரனும் வெற்றி. சத்தன்னூரில் பாஜக வேட்பாளர் பி.பி. கோபகுமார் வெற்றி