இந்தியா

பஞ்சாபில் அதிவேகமாக வந்த கார் மோதி ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் 8 பேர் பலி

காயமடைந்த தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பஞ்சாபில் MGNREGA ஊழியர்கள் 8 பேர் கார் மோதி உயிரிழந்தனர்.

பஞ்சாபில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட (MGNREGA - VBGRAMG) ஊழியர்கள் 8 பேர், அதிவேகமாக வந்த கார் மோதியதில் உயிரிழந்தனர். மேலும் பல ஊழியர்கள் பலத்த காயமடைந்தனர்.

விபத்து

பஞ்சாபில் லெஹ்ரகாகா-ஜக்கால் சாலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் 23 தொழிலாளர்கள் சாலைப் பணி செய்துகொண்டிருந்தபோது, ​​அவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியது.

விபத்து ஏற்படுத்திய கார், செவர்லே மேக்னம் ரகம் ஆகும். அதன் ஓட்டுநர், ரைத்ரானாவை சேர்ந்த பர்கத் சிங் காலா என அடையாளம் காணப்பட்டார்.

இறந்த 8 தொழிலாளர்கள் கர்ம்ஜீத் கவுர், ஜீவன் சிங், நிகி, சர்ப்ஜீத் கவுர், ரஞ்சீத் கவுர், கர்ம்ஜீத், ராணி கவுர் மற்றும் தேஸ் ராஜ் என அடையாளம் காணப்பட்டனர்.

காயமடைந்த தொழிலாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

SCROLL FOR NEXT