பண மோசடி தொடர்பான வழக்கில் மத்திய படைகளின் துணையுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள், கொல்கத்தா காவல்துறையின் துணை ஆணையரான சாந்தனு சின்ஹா பிஸ்வாஸ் இல்லத்தில் சோதனை மேற்கொண்டர்.
2002-ஆம் ஆண்டில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், ஒரு கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த நபருடன் சாந்தனு சின்ஹா பிஸ்வாஸ்க்கு இருப்பதாகக் கூறப்படும் தொடர்பு குறித்து எங்களிடம் சில கேள்விகள் உள்ளன. தற்போதைய நிலையில், சாந்தனு சின்ஹா பிஸ்வாஸ் வீட்டில் இல்லை. நாங்கள் அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம் என்று அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள், பெஹாலா (Behala) பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ஜாய் காம்தார் என்பவரின் இல்லத்திலும் சோதனையை மேற்கொண்டனர். முன்னதாக, அவரது அலுவலகத்திலும் இல்லத்திலும் அவர்கள் ஏற்கனவே ஒருமுறை சோதனையை நடத்தியிருந்தனர்.
இருவரின் வீடுகளிலும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.