மேற்கு வங்கத்தில் இந்திய தேர்தல் ஆணையம் SIR பணியை மேற்கொண்டது. SIR பணியின்போது லட்சக்கணக்கான வாக்காளர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் குற்றம்சாட்டினார். மேலும், நீதிமன்றத்தை நாடினார். இதனால் தீர்ப்பாயம் உத்தரவிட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னதாக SIR பணிகள் முடிவடைந்தது எனத் தெரிவித்த தேர்தல் ஆணையம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இந்த நிலையில் நேற்று திடீரென சுமார் 7 லட்சம் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கான தொகுதிகளில் 3.22 லட்சம் வாக்காளர்கள் பெயரும், 2-ம் கட்ட தேர்தலுக்கான தொகுதிகளில் 3.88 லட்சம் வாக்காளர்கள் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனால் இது புதிய வாக்காளர்களா? அல்லது பெயர் நீக்கப்பட்டு மீண்டும் அப்ளை செய்தவர்களின் பெயர்களா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விவரம் வெளியிடவில்லை. மேலும், வயது வாரியாகவும் விவரங்களை வெளியிடவில்லை. விவரங்கள் தனியாக உள்ளது. தேவைப்பட்டால் வெளியிடுவோம் எனவும் தெரிவித்துள்ளது அத்துடன் தீர்ப்பாயம் உத்தரவிட்டால் தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தற்போது மேற்கு வங்கத்தில் 6,82,51,008 (6.82 கோடி) வாக்காளர்கள் உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் வருகிற 23-ந்தேதி முதற்கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடைபெற இருக்கிறது.