இந்தியா

இந்திய பெருங்கடலில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இந்திய பெருங்கடல் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடல் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 5.29 மணியளவில் (இந்திய நேரப்படி) ரிக்டர் அளவில் 4.2 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 90 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.