இந்தியா

அந்தமானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.அந்தமான் கடலில் நேற்று மாலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.

அந்தமான் நிகோபர் தீவில் கடல் பகுதியில் இன்று அதிகாலை 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதிகாலை 1.43 மணி அளவில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. ஏற்கனவே அந்தமான் கடலில் நேற்று மாலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இதனால் 24 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து 2 முறை அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT