இந்தியா

குஜராத்தில் நில அதிர்வு- ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு

நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் பாவ்நகர் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவாகியுள்ளது.

அதிகாலை சுமார் 2.24 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 21.081 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.675 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்த தகவல் வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT