ரஷியா-உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பது குறித்து, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷியாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் தொலைபேசியில் உரையாடினார்.
"சமீபத்திய நிகழ்வுகள் குறித்து ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவுடன் தொலைபேசியில் நடத்திய கலந்துரையாடலை பாராட்டுகிறேன்," என்று ஜெய்சங்கர் விவரங்களை பகிராமல் சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.
இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் வேளையில், ஜெய்சங்கர்-லாவ்ரோவ் தொலைபேசி உரையாடல் நடைபெற்றது.
ரஷியா-உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதை நோக்கமாக கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் பங்களிக்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 9-ஆம் தேதியன்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடியபோது தெரிவித்தார்.
ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்பு, சாத்தியமான போர் நிறுத்தத்திற்காக இந்தியா மற்றும் மேலும் மூன்று நாடுகளிடம் இருந்து கீவ் தனித்தனி முன்மொழிவுகளை பெற்றதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா கூறினார்.