கணவருடன் நடிகை பாரதி சிங் 
இந்தியா

போதைப்பொருள் வழக்கில் நகைச்சுவை நடிகை, கணவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நகைச்சுவை நடிகை பாரதி சிங் மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வருகிறார். பாரதி சிங் அவரது கணவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

மாலை மலர்

மும்பை

மும்பை அந்தேரி பகுதியில் நகைச்சுவை நடிகை பாரதி சிங் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவரது வீட்டில் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் பாரதி சிங் மற்றும் அவரது கணவர் ஹார்ஷ் லிம்பாச்சியா மற்றும் அவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த நபரை கைது செய்தனர். இதில் பாரதி சிங்கும் அவரது கணவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் போதைப்பொருள் வழக்கில் நடிகை பாரதி சிங், அவரது கணவர் மற்றும் போதைப்பொருள் சப்ளை செய்தவருக்கு எதிராக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மும்பை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர். சுமார் 1,200 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் ஒரு வாரத்துக்கு முன் தாக்கல் செய்ததாக போதைப்பொருள் தடுப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.