ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்த நாயை பாம்பு கடித்ததால் உடலில் விஷம் ஏறியது.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், பிதாபுரம் அடுத்த கோத்த பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். இவர் பாக்சர் இன நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை பக்கத்து காலி மனையில் இருந்து நாகப்பாம்பு ஒன்று ஸ்ரீனிவாஸ் வீட்டிற்குள் வந்தது. இதனைக் கண்ட ஸ்ரீனிவாஸ் குடும்பத்தினர் அலறினர். அப்போது பாம்பை கண்ட நாய் உடனடியாக உஷார் ஆனது. பாம்பை மேலும் வீட்டிற்கு நுழைய விடாமல் தடுத்தது.
அப்போது நாய்க்கும், பாம்புக்கும் இடையே சிறிது நேரம் சண்டை ஏற்பட்டது. பாம்பு ஆக்ரோஷத்துடன் படம் எடுத்து நாயை கடிக்க முயன்றது. ஆனால் நாய் எதிர்பாராத விதமாக பாம்பின் தலையை கவ்வி கடித்தது. இதில் பாம்பு பரிதாபமாக இறந்தது.
பாம்பின் தலையை கடித்ததால் நாயின் உடலில் விஷம் ஏறி நிலைகுலைந்தது. செல்ல நாயை காக்கிநாடாவில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.