இந்தியா

தேசப் பிரிவினைக்கு சாவர்க்கரும் காரணம்: திக்விஜய் சிங் சர்ச்சை கருத்து

பாஜக, சங் பரிவாரத்துடன் சேர்ந்து அசாதுதீன் ஒவைசி கூட்டுச்சதியில் செயல்படுகிறார்.

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் காங்கிரஸ் மூத்த தலைவரான திக் விஜய் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாஜக மற்றும் சங் பரிவாரத்துடன் சேர்ந்து அசாதுதீன் ஒவைசி கூட்டுச் சதியில் செயல்படுகிறார்.

ஏஐஎம்ஐஎம் என் மீது 4 பொய் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. நான் இந்து மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு எதிராக நிற்பதால், ஏஐஎம்ஐஎம் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகிய இரண்டுமே என் மீது வழக்குத் தொடுக்கின்றன. அவர்கள் இருவரும் சேர்ந்து நாட்டைப் பிளவுபடுத்த வேலை செய்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, நாட்டின் பிரிவினைக்கு யார் காரணம்? முகமது அலி ஜின்னாவும் சாவர்க்கரும்தான். இது ஒரு வரலாற்று உண்மை என தெரிவித்தார்.