பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் புதுடெல்லி வந்துள்ளனர். ரஷிய அதிபர் புதின், ஈரான் பிரதமர், சீன அதிபர் ஜி ஜின் பிங் உள்ளிட்ட தலைவர்கள் வந்துள்ளனர்.
பொதுவாக மாநாட்டின் போது உலகளவில் பாதிக்கப்படக்கூடிய ஒரு குறிப்பிட்ட சம்பவம் குறித்து பொது கருத்து ஒற்றுமையுடன் பிரகடனம் வெளியிடப்படும். தற்போது உலகளவில் அமெரிக்கா- ஈரான் போர், உக்ரைன்- ரஷியா போர் சண்டை நடைபெற்று வருகிறது. அதேபோல் ஹவுதி- சவுதி அரேபியா இடையே சண்டை நடைபெறுகிறது.
இந்த நிலையில் எந்தவொரு நாட்டையும் குறிப்பிடாமல் எந்த வகையான ஆக்கிரமிப்பையும் வன்மையாக கண்டிக்கும் வகையில் ஒருமித்த கருத்துடன் பிரகடனம் வெளியிட இந்தியா முயற்சி மேற்கொண்டது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் அனைத்து நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதன் அடிப்படையில் மோதலை முடிவுக்கு கொண்டு வர உரையாடலும் ராஜதந்திரமுமே முன்னேற்றத்திற்கான வழி என்பதை மையமாக வைத்து பிரிக்ஸ் புது டெல்லி பிரகடனம் வெளியிடப்பட இருக்கிறது. இதற்கு அனைத்து நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு பிரகடனம் வெளியிடப்பட இருக்கிறது.