சிபிஎஸ்இ (CBSE) 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. மாணவர்களுக்கு தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்ணில் திருப்தி ஏற்படவில்லை என்றால் வினாத்தாளை சரிபார்க்கவும, மறுமதிப்பீட்டிற்கு அப்ளை செய்யவும் வினாத்தாள் நகலை பெற முடியும்.
வினாத்தாள் நகலை பெற முன்னதாக 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது அது 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மறுமதிப்பீடு செய்ய ஒரு கேள்விக்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தற்போது சிபிஎஸ்இ வினாத்தாள் அனைத்தையும் கணினி மையமாக்கியுள்ளது. அதன்படி ஒரு மாணவன் வினாத்தாளின் நகலை பெற விண்ணப்பித்தால், அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்ட வினாத்தாள் வழங்கப்படும்.
இந்த நிலையில்தான் வினாத்தாளை சரிபார்க்கவும், மறுமதிப்பீடு செய்யவும் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், மாணவர்களுக்கு உடனடியாக ஸ்கேன் செய்யப்பட்ட வினாத்தாள் நகல் வழங்கப்படவில்லை. தொழில்நுட்பம் கோளாறு போன்ற பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் முகுந்த வேதனை அடைந்துள்ளனர். இது தொடர்பாக உடனடியாக அறிக்கை தருமாறு சிபிஎஸ்இ-க்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரவிட்டுள்ளார்.
நீட் தேர்வுக்கான வினாக்கள் கசிந்ததாக, தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுத்தேர்வு நடைபெற இருக்கும் நிலயைில், தற்போது வினாத்தாள் நகல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.