மத்திய கல்வித்துறையின் கீழ் உள்ள வெளிநாட்டு மொழி பல்கலைக்கழகம் (Foreign Language University) ராஜஸ்தான் கல்வித்துறை இடையில் முதற்கட்டமாக 1000 மாணவ- மாணவிகளுக்கு பிரெஞ்ச், ஜெர்மன், ஜப்பான், கொரியா, ஸ்பெயின் உள்ளிட்ட மொழிகள் கற்றுக் கொடுக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில் "மொழி வெறுமன தொடர்பு கொள்வதற்கு மட்டுமல்ல. சமூகத்தை புரிந்து கொள்வதற்கான, இணைப்பதற்கான கருவியாக உள்ளது. ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகள் அதிக வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. நம்முடைய இளைஞர்கள் அவர்களுடைய மொழிகளை கற்றுக் கொண்டால், மென்பொருள் துறையில் மட்டுமல்ல, வர்த்தகம் மற்றும் மார்க்கெட்டிங் துறைகளிலும் வேலைவாய்ப்புகளை தேட முடியும். ஐரோப்பிய யூனியன் இடையிலான வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் மூலம் இளைஞர்கள் வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்வதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்புகளை பெற முடியும்" என்றார்.