இந்தியா

கொலை முயற்சியில் உயிர்தப்பிய நடிகர் டைகர் ஷெராஃப்: தொடர்பு கொண்டு பேசிய முதல்வர் ஃபட்னாவிஸ்

கொலை முயற்சி சம்பவம் குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டதாக தகவல்.

ஜுஹு பகுதியில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் இருந்து நடிகர் டைகர் ஷெராஃப் காயமின்றி தப்பினார். இந்த பரபரப்பான சம்பவத்தைத் தொடர்ந்து, மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் நடிகர் டைகர் ஷெராஃப் மற்றும் மும்பை காவல் ஆணையரிடம் தொலைபேசியில் பேசினார்.

இந்த சம்பவம் குறித்த விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர், தாக்குதல் நடத்தியவர்களை விரைந்து கைது செய்யவும், விசாரணையை வேகப்படுத்தவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் காவல் ஆணையர் தேவன் பாரதியிடம் வலியுறுத்தினார்.

ஆதரவு உறுதி:

மேலும், நடிகர் டைகர் ஷெராஃப்பிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர், அவருக்கு தேவையான ஆதரவை உறுதி அளித்ததுடன், குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும், கவலைப்பட வேண்டாம் என்றும் கூறினார்.

உள்துறை அமைச்சகத்தையும் கவனிக்கும் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஷெராஃப்-இடம், "நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம். கவலைப்படாதீர்கள்" என்று தெரிவித்தார்.

தீவிர விசாரணை:

கொலை முயற்சி சம்பவம் குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையில் 15 குழுக்கள் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், விசாரணையை விரைவுபடுத்தவும் ஃபட்னாவிஸ் காவல்துறை ஆணையரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது.

சல்மான் கானுக்கும் கொலை மிரட்டல்:

மும்பையின் ஜூஹூவில், பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃபை மூன்று மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளில் கடந்து சென்று, அவர் மீதும் அவரது ஓட்டுநர் மீதும் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் டைகர் ஷெராஃபின் ஓட்டுநர் ஃபிர்தோஷ் மற்றும் அங்கிருந்த ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஃபிர்தோஷின் இடது கையில் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பகட்ட தகவல்களின்படி, டைகர் ஷெராஃப் பாதுகாப்பாக உள்ளார். இந்த தாக்குதலில் துப்பாக்கி காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. துப்பாக்கிச் சூட்டிற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது. மேலும், அந்தக் கும்பல் நடிகர் சல்மான் கானுக்கு புதிதாக மிரட்டல் விடுத்துள்ளது.

SCROLL FOR NEXT