கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே தலைமையில் அக்கட்சியினர் மற்றும் இளைஞர்கள், SIR விவாகரத்தில் ஞானேஷ்குமாருக்கு எதிராக இன்று டெல்லியில் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தனர்.
இதனால் ஜந்தர் மந்தர் மற்றும் டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து போராட்டத்திற்கான டெல்லி வருகை தரும் தலைவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் போன்றோரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அபிஜீத் தீப்கே விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். விமாத்தில் இருந்து இறங்குவதற்கு முன்னதாகவே அவரை போலீசார் கைது செய்தனர். அதுபோல் சவுரவ் தாஸ் மற்றும் அஷுடோஷ் ரங்கா போன்றோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனால் போராட்டத்தை அஜிங்க்யா ஷிண்டே வழி நடத்துவார் என அபிஜீத் தீப்கே அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அபிஜீத் ஷிண்டே வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் "நீங்கள் இந்தப் காணொளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், நானும், சவுரவ் தாஸ், அஷுடோஷ் ரங்காவும் கைது செய்யப்பட்டுவிட்டோம் என்று அர்த்தம். நாங்கள் இல்லாத நேரத்தில், அஜிங்க்யா போராட்டத்தையும் CJP இயக்கத்தையும் முன்னின்று வழி நடத்துவார். தயவு செய்து அவரைப் பின்பற்றுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அஜிங்க்யா ஷிண்டே மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அபிஜீத் தீப்கேவுக்கு பல வருடங்களாக நெருக்கமானவராக இருக்கிறார். இவர் முன்னதாக மகாராஷ்டிரா ஆம் ஆத்மி கட்சியின் சமூக வலைத்தள ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியில் பணியாற்றுவதற்கான கார்ப்பரேட் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆக்கட்சியில் இணைந்தார். கோவா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்காக பணியாற்றினார். கோவா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறாத நிலையில் மகாராஷ்டிரா மாநில ஆம் ஆத்மி கட்சிக்காக பணியாற்றினார். கடந்த 2016-ம் ஆண்டு அபிஜீத் தீப்கேவை சந்தித்ததாக கூறப்படுகிறது.