இந்தியா

VIDEO: வரவேற்பை பெற்ற ஆசிரியையின் வரவேற்பு பலகை

பலகையில் சிறிய தீப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொன்றிலும் ஒரு மாணவரின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது.

வீடியோவில், ஆசிரியை தங்கள் பெயர்களை அழைக்கும் வரை காத்திருக்காமல், மாணவர்கள் கையால் செய்யப்பட்ட பலகையை பயன்படுத்தி உற்சாகமாகத் தங்கள் வருகையைப் பதிவு செய்யும் காட்சிகள் உள்ளது.

வருகை பதிவு

பள்ளிகளில் முதல் வகுப்பு தொடங்குவதற்கு முன்பாகவே மாணவ, மாணவிகளின் வருகை பதிவு செய்யப்படும். வகுப்பு ஆசிரியர் ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் பெயர்களின் பெயரை சொல்லி அவர்களின் வருகையை பதிவு செய்வது வழக்கம். அதன்பிறகு தான் பாடங்கள் நடத்துவார்.

இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ஆசிரியை ஒருவர், கையால் செய்யப்பட்ட தீப்பெட்டி பலகையைப் பயன்படுத்தி, வருகைப்பதிவை மாணவர்களே முன்னின்று நடத்தும் ஒரு செயல்பாடாக மாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

"என் சின்னஞ்சிறு குழந்தைகள், பொறுப்பேற்கிறார்கள்" என்ற தலைப்புடன் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஆசிரியை தங்கள் பெயர்களை அழைக்கும் வரை காத்திருக்காமல், மாணவர்கள் கையால் செய்யப்பட்ட பலகையை பயன்படுத்தி உற்சாகமாகத் தங்கள் வருகையைப் பதிவு செய்யும் காட்சிகள் உள்ளது.

வீடியோ

ஆசிரியை வகுப்பறைக்குள் நுழைவதில் இருந்து வீடியோ தொடங்குகிறது. அவரைத் தொடர்ந்து வரும் குழந்தைகள், சுவரில் பொருத்தப்பட்டிருந்த வண்ணமயமான, சுயமாக செய்யப்பட்ட வருகை பலகையை நோக்கி நேராகச் செல்கின்றனர். பலகையில் சிறிய தீப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொன்றிலும் ஒரு மாணவரின் முகம் பொறிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தீப்பெட்டிக்குள்ளும் இரண்டு எழுத்துக்கள் உள்ளன: 'A' என்பது வருகையின்மையையும், 'P' என்பது வருகையையும் குறிக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் வகுப்பறைக்குள் நுழையும்போது, அவர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்வதற்கு முன், தங்கள் தீப்பெட்டியைத் திறந்து 'P' என்ற எழுத்தை வெளிப்படுத்தி, தாங்கள் வந்திருப்பதை அமைதியாக குறித்துக்கொள்கிறார்கள். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் , அன்றாடப் பணியை அர்த்தமுள்ள கற்றல் அனுபவமாக மாற்றியதற்காக ஆசிரியையை பாராட்டி பதிவிட்டனர்.