தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் 
இந்தியா

டெல்லி தீ விபத்து ஏற்பட்ட வணிக வளாக கட்டிட உரிமையாளர் கைது

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.

புதுடெல்லி:

டெல்லி மேற்கு பகுதியில் உள்ள முன்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 3 அடுக்குமாடி அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடடத்தில் நேற்று முந்தினம் மாலை 4.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  

இந்த தீ விபத்தில் 27 பேர் உடல் கருகி பலியானார்கள். 12 பேர் காயமடைந்தனர். 70க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். சிலர் மாடியில் இருந்து குதித்து தப்பினர். இந்த விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட்ட டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். மேலும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். 

இந்நிலையில் தற்போது தீ விபத்து ஏற்பட்ட வணிக வளாக கட்டிடத்தின் உரிமையாளர் மணிஷ் லக்ராவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வணிக வளாக கட்டிடத்தை பாதுகாப்பு இல்லாத வகையில் கட்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT