இந்தியா

சிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் கண்டனம் தெரிவித்தும் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

கரப்பான்பூச்சி கட்சியின் தொடர் போராட்டங்கள் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்த டெல்லியின் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம், மூடப்பட்ட 17 மெட்ரோ நிலையங்களும் பயணிகளின் சேவைக்காக மீண்டும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

போராட்டத்தின் பின்னணி

நீட் தேர்வு குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சிஜேபி கட்சியினர் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் நாடாளுமன்றம் நோக்கி திடீர் பேரணி சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை போலீசார் தடியால் தாக்கி பேரணியை கலைத்தனர். இச்சூழலில் நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக டெல்லியில் போராட்டத்தில் அதிகமானோர் கலந்துகொண்டு வருகின்றனர்.

இதனால் பாதுகாப்பு காரணங்களுக்கான மெட்ரோ நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.