சத் பூஜை என்பது உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.
இது சூரிய கடவுளின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உண்ணா நோன்பு, சூரியனுக்கு பிரார்த்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் நின்று தியானம் செய்தல் உள்ளிட்ட 4 நாள் சடங்குகளை உள்ளடக்கியது.
இந்த ஆண்டுக்கான சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
இன்று பக்தர்கள் நதிக்கரை, கடல் அல்லது நீர் நிலைகளில் நீராடி உணவை எடுத்துக்கொள்கிறார்கள். 2-வது நாள் உண்ணா நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் ரசாயன நச்சு நுரை மிதந்து செல்லும் மாசடைந்த யமுனை ஆற்றில் பெண்கள் சத் பூஜைகாக நீராடியுள்ளனர்.
ரசாயன நுரையுடன் யமுனை ஆற்றில் பெண்கள் நீராடிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் பொதுமக்கள் நீராட டெல்லி அரசு தடை விதித்தது.
இந்த தடையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பொதுநல மனுவை நிராகரித்த நீதிமன்றம், யமுனை நதி மிகவும் மாசடைந்து இருப்பதால் அங்கு நீராடும் மக்களுக்கு உடல் நலப்பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது ஆதலால் பாதுகாப்பான இடங்களில் சத் பூஜை கொண்டாடுங்கள் என்று கருத்து தெரிவித்தது.
VIDEO | Delhi: Chhath Puja devotees offer prayer in Yamuna even as a layer of toxic foam floats on the river surface. The four-day Chhath festival begins today with 'nahay khaye'. Visuals from Kalindi Kunj.#ChhathPuja #YamunaRiver (Full video available on PTI Videos -… pic.twitter.com/z33cwy97Bk