டெல்லியில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
தெற்கு டெல்லியின் சாகேத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சைதுல்அஜாப் பகுதியில் இன்று இரவு சுமார் 7.44 மணியளவில் 5 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த இடத்திலிருந்து இதுவரை 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எனினும், இடிபாடுகளுக்குள் இன்னும் 5 முதல் 6 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை, டெல்லி தீயணைப்புத் துறை இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடிந்து விழுந்த 5 அடுக்கு கட்டடத்தின் ஒரு பகுதியில் கட்டுமானப் பணிகள் நடந்து வந்ததாகத் தெரிகிறது.
மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.