2026-ம் ஆண்டிற்கான பாதுகாப்புப் படை விருது வழங்கும் விழா புது டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் 2025 பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்துர்' தாக்குதல்கள் போன்றவற்றில் பங்கேற்ற 51 வீரர்களைக் குடியரசு தலைவர் கௌரவித்தார்.
இதில் ஏழு கீர்த்தி சக்ராக்கள், 15 வீர் சக்ராக்கள், மற்றும் 29 சௌரிய சக்ராக்கள் இடம்பெற்றுள்ளனர்.
அப்போது திருமதி பிரபாகர் தனது மகன் சிப்பாய் ஜன்ஜல் பிரவீன் பிரபாகரின் மறைவுக்குப் பின் வழங்கப்படும் கீர்த்தி சக்ரா விருதைப் பெறும்போது கண்ணீர் விட்டு அழுததும் ஜனாதிபதி முர்மு தனிப்பட்ட முறையில் ஆறுதல் கூறினார்.
மேலும் லெப்டினன்ட் ஷஷாங்க் திவாரியின் தாயார் அழுததும் அவரை ஆரத்தழுவி தேற்றினார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடிய லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் ஏ மற்றும் மார்கோஸ் படைப்பிரிவின் லெப்டினன்ட் கமாண்டர் சூரஜ் பராஷர் போன்ற மாவீரர்களுக்கு உயரிய கௌரவ விருதுகள் வழங்கப்பட்டது.