இந்தியா

அமோனியா கசிவு: துயர சம்பவத்தால் ஆழ்ந்த வேதனை அடைந்தேன் - குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மீன் தீவன ஏற்றுமதி தொழிற்சாலையின் உற்பத்தி பிரிவில் ஞாயிற்றுக்கிழமையன்று அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்; மேலும் 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக பிரதமர் மோடி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த நிலையில், தற்போது குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எக்ஸ் தள பதிவு:

அந்த பதிவில், "தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நிகழ்ந்த துயர சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதை கேட்டு ஆழ்ந்த வேதனை அடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT