இந்தியா

திருப்பதி கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்

தீபாவளி நாளில் ஏழுமலையானை தரிசக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

திருப்பதியில் நேற்று 78,228 பேர் தரிசனம் செய்தனர். 25,564 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.01 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று பாரம்பரிய தீபாவளி ஆஸ்தானம் கடைப்பிடிக்கப்பட்டது.

கருடாழ்வார் கோவில்

அதன்படி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான், விஸ்வக் சேனர் ஆகிய உற்சவ மூர்த்திகள் கருடாழ்வார் கோவிலில் எழுந்தருளினார்.

கோவிலில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதையடுத்து மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டன. தீபாவளி நாளில் ஏழுமலையானை தரிசக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பக்தர்கள் தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பப்படும் அறைகள் முழுவதும் நிரம்பி வழிந்தது.

திருப்பதி

தரிசன வரிசையில் இருந்து கிருஷ்ண தேஜா கெஸ்ட் ஹவுஸ் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.

திருப்பதியில் நேற்று 78,228 பேர் தரிசனம் செய்தனர். 25,564 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.01 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

நேரடி இலவச தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT