இந்தியா

உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் குறித்த விவாதம் முடிவுக்கு வந்தது: மம்தா, அபிஷேக் பானர்ஜி போலி டி.எம்.சி.- பாஜக

19 முதல் 20 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கையெழுத்திட்டு ஓம் பிர்லாவிடம் கடிதம் வழங்கியுள்ளது மம்தாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததும், அக்கட்சியில் புயல் வீச ஆரம்பிடித்துள்ளது. 80 எம்.எல்.ஏ.-க்களில் 60 பேர் தனியாக செயல்படுகின்றன. தங்களுக்கென சட்டமன்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரை உருவாக்கியுள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜினாமா

இதனைத் தொடர்ந்து எம்.பி.க்களிடமும் அதிருப்தி நிலவி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 மாநில எம்.பி.க்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

20 மக்களவை எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு

இது மட்டுமல்லாமல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கியுள்ளனர். இதில் 19 முதல் 20 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் 20 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட ககோலி கோஷ் தசிதார் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ்தான் உண்மையான கட்சி. மம்தா மற்றும் அபிஷேக் பானர்ஜி தலைமையிலானது அல்ல என்று பாஜக-வின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஷேசாத் பூனவாலா கூறியதாவது:-

வாரிசு அரசியல் மற்றும் மம்தா அவருடைய மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு முக்கியத்துவம் கொடுத்த காரணத்தினாலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பார்க்க முடிகிறது.

அதற்கான ஆதாரம் இப்போது வெளிப்படையாக உள்ளது. ககோலி கோஷ் தலைமையிலான உண்மையான திரிணாமுல் காங்கிரஸின் (TMC) 20 மக்களவை உறுப்பினர்களின் கையொப்பங்களைக் கொண்ட ஒரு ஆவணம், மம்தா மற்றும் அபிஷேக் பிரதிநிதித்துவப்படுத்தும் திரிணாமுல் காங்கிரசில் வேறுபட்டது என்பதைக் காட்டுகிறது. அவர்கள் இப்போது போலியான திரிணாமுல் காங்கிரஸாக உள்ளனர்.

இவ்வாறு ஷேசாத் பூனவாலா தெரிவித்துள்ளார்.