அரியானா மாநிலம் பானிபட் மாவட்டம் நாரா என்ற கிராமத்ததை சேர்ந்தவர் ராஜேஷ் (வயசு 46), இவரது மனைவி சுமன் (44) தம்பதியின் மகன் ஆஷிஷ். இவர் கடந்த ஆண்டு சினேகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமூக ஊடகங்களில் சினேகா ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
அந்தக் கிராம மக்கள் பாரம்பரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இந்த நிலையில், சினேகா தொடர்ந்து குட்டையான ஆடைகளில் வீடியோக்களைப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். இதற்கு அவருடைய மாமனார், மாமியார் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனால் ஏற்பட்ட தகராறில் சினேகா மாமனார், மாமியாரை தாக்கினார். இதில் மனமுடைந்த மாமனார், ராஜேஷ், மாமியார் சுமன் விஷம் குடித்தனர்.
சுயநினைவின்றி இருந்த அவர்களைக் கண்ட உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து ராஜேஷின் சகோதரர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.